ஐஎஸ்எல் இறுதிச்சுற்றில் சென்னை: 3-0 என கோவாவைத் தோற்கடித்தது!

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் ஜேஜே, 26 மற்றும் 90-வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அசத்தினார்...
ஐஎஸ்எல் இறுதிச்சுற்றில் சென்னை: 3-0 என கோவாவைத் தோற்கடித்தது!
Updated on
1 min read

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் (ஐஎஸ்எல்)  சென்னையின் எஃப்சி-எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை அணி 3-0 என அபாரமாக வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் பகுதி அரையிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் ஜேஜே, 26 மற்றும் 90-வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அசத்தினார். 29-வது நிமிடத்தில் தனபால் கணேஷ் ஒரு கோல் அடித்தார். 

கடந்த ஏழு ஆட்டங்களாக கோல் அடிக்காமல் ஏமாற்றிய ஜேஜே, இந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்து சென்னை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ஜனவரி 25 அன்று கொல்கத்தா அணிக்கு எதிராக ஜேஜே கோல் அடித்தார். அதன்பிறகு நேற்றுதான் அவருடைய பங்களிப்பில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 

பெங்களூரு எஃப்சி-எஃப்சி புணே சிட்டி அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-ஆவது பகுதி ஆட்டத்தில் பெங்களூரு 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் கோல் இன்றி டிரா ஆகியிருந்தது. இந்நிலையில், 2-ஆவது பகுதி ஆட்டத்தில் வென்றதன் அடிப்படையில் பெங்களூரு முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

ஞாயிறன்று பெங்களூரில் சென்னை - பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது. சென்னை அணி இரண்டாவது முறையாக ஐஎஸ்எல் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 2015-ம் ஆண்டு கோவாவைத் தோற்கடித்து கோப்பையைத் தட்டிச்சென்றது சென்னை அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com