சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

விராட் கோலி, தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டகிராம் விருதுகள் அறிவிப்பு!

இந்தியாவில் முதல்முறையாக இன்ஸ்டகிராம் சமூகவலைத்தள விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :20 மார்ச் 2018, 7:15 am

எழில்

இந்தியாவில் முதல்முறையாக இன்ஸ்டகிராம் சமூகவலைத்தள விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விராட் கோலி, தீபிகா படுகோன் போன்ற பிரபலங்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டகிராம் கணக்கு  என்கிற விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்ஸ்டகிராம் கணக்கை 1 கோடியே 98 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இது மற்ற பிரபலங்களை விடக் குறைவாக இருந்தாலும் லைக்குகள், கமெண்டுகளில் கோலி முன்னிலையில் உள்ளார். அதனால் இந்த விருது கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதிகம் பேர் பின்தொடரும் இன்ஸ்டகிராம் விருது பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரை 2 கோடியே 24 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அடுத்த இடத்தில் உள்ளவர் பிரியங்காசோப்ரா. அவரை 2 கோடியே 20 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 2 கோடி பேர் பின்தொடரும் ஆலியா பட், ஷ்ரத்தா கபூருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மராத்தி படமான சாய்ரத் ஹிந்தி ரீமேக்கில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூருக்கு ஜோடியாக நடிக்கும் இஷான் கட்டருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டகிராமில் நன்கு வளர்ந்து வரும் பிரபலமாக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை 1 லட்சத்து 89 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.