இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான தமிழக வீராங்கனை!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 23 வயது தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன் தேர்வாகியுள்ளார்...


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு 23 வயது தமிழக வீராங்கனை ஹேமலதா தயாளன் தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீராங்கனை ஹேமலதா இடம்பிடித்துள்ளார். ஜுலான் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஏக்தா பிஸ்ட், தேவிகா வைத்யா ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். அதேசமயம் பூனம் ரெளத், மோனா மேஷ்ராம், சுகன்யா பரிதா ஆகிய வீராங்கனைகள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
ஆல்ரவுண்டரான ஹேமலதா, இந்திய ஏ அணிக்காக இதற்கு முன்பு விளையாடியுள்ளார்.
ஏப்ரல் 6 அன்று ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. அனைத்து ஆட்டங்களும் நாகபுரியில் நடைபெறவுள்ளன.
இந்திய அணி
மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ஏக்தா பிஸ்ட், பூணம் யாதவ், சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...