
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் டெஸ்டைப் போலவே இந்த டெஸ்டிலும் போல்டும் செளதியும் அருமையாகப் பந்துவீசினார்கள். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் என்கிற மோசமான நிலையை அடைந்தது இங்கிலாந்து. பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். வுட் 62 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் குக், 2 ரன்கள் மட்டும் எடுத்து மீண்டும் ஏமாற்றமளித்தார்.
முதல்நாள் முடிவில் இங்கிலாந்து அணி, 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள்ளது. நியூஸிலாந்துத் தரப்பில் செளதி 5 விக்கெட்டுகளும் போல்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.