சர்ச்சைகளுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சாதித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் மர்க்ராம் மற்றும் டி வில்லியர்ஸ் அதிக ரன்கள் குவித்து புது சாதனைப் படைத்துள்ளனர்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் சத்தமில்லாமல் சாதித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள்

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜொஹன்னஸ்பர்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

எனவே இந்த டெஸ்டில் வெற்றிபெற்று அல்லது டிரா செய்து தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது. அதுபோல தங்கள் அணியின் மீது படிந்துள்ள களங்கத்தை போக்கும் விதமாக இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்து புது துவக்கத்துக்கு ஆஸ்திரேலியா தயாராகி உள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர் ஏய்டன் மர்க்ராம் அதிரடியாக ஆடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். மொத்தம் 216 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி, 1 சிக்ஸரின் உதவியுடன் 152 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவர் சில புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.


தென் ஆப்பிரிக்க அணியில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4 சதங்கள் அடித்தவர்கள்:

  • ஏ.மெல்வைல் - 10 இன்னிங்ஸ்
  • கிரீம் ஸ்மித், ஏய்டன் மர்க்ராம் - 17 இன்னிங்ஸ்
  • கிரீம் பொல்லக் - 22 இன்னிங்ஸ்
  • ஜாக்குவஸ் ருடால்ஃப் - 24 இன்னிங்ஸ்
  • டட்லி நௌர்ஸ், அல்விரோ பீட்டர்சன் - 27 இன்னிங்ஸ்


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்க துவக்க பேட்ஸ்மேன்:

  • ஈ.பார்லோ - 201 ரன்கள் - அடிலெய்ட், 1964
  • கேரி கிறிஸ்டன் - 153 ரன்கள் - சிட்னி கிரிக்கெட் மைதானம், 2002
  • சி.பிராஃங் - 153 ரன்கள் - ஓல்ட் வான்டரர்ஸ, 1921
  • ஏய்டன் மர்க்ராம் - 152 ரன்கள் - வான்டரர்ஸ், 2018
  • ஆஷ்வல் பிரின்ஸ் - 150 ரன்கள் - கேப்டவுன், 2009
  • ஜெ.சூல்ச் - 150 ரன்கள் - சிட்னி கிரிக்கெட் மைதானம், 1911

வான்டரர்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்:

  • டெட் டெக்ஸ்டர் - 167 ரன்கள்
  • ஜே.பி.டுமினி - 155 ரன்கள்
  • ஏய்டன் மர்க்ராம் - 152 ரன்கள்
  • ஆண்ட்ரூ ஸ்டார்ஸ் - 147 ரன்கள்


அதுபோல இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அரைசதம் கடந்த நிலையில், சில சாதனைகளைப் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் டி வில்லியர்ஸ் குவித்த ரன்கள்:

  • 402* ரன்கள் - ஆஸ்திரேலியா, 2018
  • 362 ரன்கள் - இங்கிலாந்து, 2004/05 (அறிமுக தொடர்)
  • 357 ரன்கள் - ஆஸ்திரேலியா, 2008/09
  • 353 ரன்கள் - இலங்கை, 2011/12
  • 352 ரன்கள் - பாகிஸ்தான், 2012/13


டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் கடந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள்:

  • பி.மிட்செல் - இங்கிலாந்து - 2,732 ரன்கள்
  • ஜாக்குவஸ் கலீஸ் - மேற்கிந்திய தீவுகள் - 2,356 ரன்கள்
  • ஹெச்.டெய்லர் - இங்கிலாந்து - 2,287 ரன்கள்
  • ஜாக்குவஸ் கலீஸ் - இங்கிலாந்து - 2,141 ரன்கள்
  • கிரீம் ஸ்மித் - இங்கிலாந்து - 2,051 ரன்கள்
  • டட்லி நௌர்ஸ் - இங்கிலாந்து - 2,037 ரன்கள்
  • ஏபி டி வில்லியர்ஸ் - ஆஸ்திரேலியா - 2,000* ரன்கள்


டி வில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பிய பின்னர் நடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் 7-இல் அரைசதம்:

  • ஜிம்பாப்வே - 53 ரன்கள்
  • இந்தியா - 65, 35 ரன்கள்
  • இந்தியா - 20, 80 ரன்கள்
  • ஆஸ்திரேலியா - 71*, 0 ரன்கள்
  • ஆஸ்திரேலியா - 126*, 28 ரன்கள்
  • ஆஸ்திரேலியா - 64, 63 ரன்கள்
  • ஆஸ்திரேலியா - 51* ரன்கள் (நடப்பு டெஸ்ட்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com