ஏடிபி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார் ரோஜர் பெடரர்.
உலகின் முதல்நிலை வீரராக நடாலும், இரண்டாம் நிலை வீரராக பெடரரும் நீடித்து வந்தனர். இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் நடால் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். இதனால் புள்ளிகளை இழந்த நடால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் முதல் எந்த போட்டியில் பங்கேற்காத நிலையிலும் பெடரர் தற்போது மீண்டும் முதல்நிலை வீரர் ஆகியுள்ளார்.
முன்னாள் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 18-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மாட்ரிட் ஓபன் சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ஏடிபி தரவரிசைப் பட்டியல்: முதல் 10 இடங்களில் உள்ள வீரர்கள் வருமாறு:
ரோஜர் பெடரர் (8670 புள்ளிகள்+1), நடால் (9950-1), அலெக்சாண்டர் வெரேவ் (6015), கிரிகோர் டிமிட்ரோவ் (4870), மரின் சிலிச் (4470),
ஜுவான் டெல் போட்ரோ (4540), கெவின் ஆண்டர்சன் (3360), டொமினிக் தீம் (3545), ஜான் ஐஷ்நர் (3305), டேவின் கோபின் (2930).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


