

ஜுவென்டஸ் அணியில் இருந்து 17 ஆண்டுகள் பங்கேற்று விளையாடியதற்கு பின் சனிக்கிழமை விடைபெறுகிறார் பிரபல கால்பந்து வீரரும், கோல் கீப்பருமான ஜியான்லுகி பஃபான்.
சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் பஃபான் (40) ஜுவென்டஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஜுவென்டஸ் அணி அண்மையில் சீரி ஏ கால்பந்து பட்டம் வெல்லவும் பஃபான் உறுதுணையாக இருந்தார்.
பார்மா அணியில் கடந்த 1995-இல் இடம் பெற்ற பஃபான், 2001-இல் ஜுவென்டஸ் அணிக்கு இடம் மாறினார். இத்தாலி அணியின் சார்பில் 2006 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் 3 முறை பங்கேற்று விளையாடியவர் பஃபான்.
சனிக்கிழமை வெரோனா அணியுடன் மோதும் ஆட்டமே பஃபான் ஜுவென்டஸ் அணியில் இடம் பெறும் கடைசி ஆட்டமாகும்.
அவர் ஓய்வுக்கு பின் லிவர்பூல் அணியில் இடம் பெறலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஓய்வுக்கு பின்னர் மீண்டும் விளையாடுவது குறித்து முடிவு செய்யவில்லை. இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. எனது நலனைக் கருதி தான் விரைவில் முடிவெடுப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.