ஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத், வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 
ஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத், வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த அணிக்கு ஜுன் மாதம் முதல் அடுத்த வரும் 3 மாதங்களுக்கு இடைக்காலப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

இதுகுறித்து லால்சந்த் ராஜ்புத் கூறுகையில்,

ஜிம்பாப்வே சிறந்த கிரிக்கெட் அணி. அந்த அணி பல நல்ல வீரர்களை உலக கிரிக்கெட்டுக்கு வழங்கியுள்ளது. எனக்கு எப்போதுமே சவால்களை நேசிப்பவன். அவ்வகையில் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரு இரவில் மாற்றங்கள் நிகழாது. இருப்பினும் ஜிம்பாப்வே அணியை என்னால் மிகச் சிறந்த அணியாக உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அந்த அணியை சிறப்பானதாக உருவாக்கினேன். டெஸ்ட் அந்தஸ்து பெறும் அணியாக உயர்த்தினேன். அதுபோன்று ஜிம்பாப்வே அணியை மீண்டும் நல்ல நிலைக்கு உயர்த்துவேன் என்றார்.

லால்சந்த் ராஜ்புத் (வயது 56), கடந்த 1985 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுபோல 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். மேலும் 2007-ல் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் மேலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com