தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று தேர்வான முக்கிய வீரர்களின் பட்டியல்!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டியூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ்...
தமிழ்நாடு பிரீமியர் லீக்: இன்று தேர்வான முக்கிய வீரர்களின் பட்டியல்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 11 அன்று தொடங்கவுள்ளன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அல்லது மாவட்ட சங்கங்களில் பதிவு செய்த வீரர்கள் அனைவரும் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றவர்கள்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டியூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ், காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸைத் தோற்கடித்தது. இதன்மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் தூத்துக்குடி அணியிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது சூப்பர் கில்லீஸ்.

இன்று நடைபெற்ற டிஎன்பிஎல் ஏலத்தில் தேர்வான முக்கிய வீரர்கள்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: விஜய் சங்கர், கோபிநாத், எம். அஸ்வின், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எஸ். கார்த்திக், அலெக்ஸாண்டர், சசிதேவ்
திண்டுக்கல் டிராகன்ஸ்: ஆர். அஸ்வின், ஜெகதீசன், ஆர். விவேக்,  எம். முகமது, ஆர். ரோஹித்
டியூட்டி பேட்ரியாட்ஸ்: வாஷிங்டன் சுந்தர், கெளசிக் காந்தி, சாய் கிஷோர், ராஜகோபால் சதீஷ், அதிசயராஜ் டேவிட்சன், சுப்ரமணியன் ஆனந்த், ஆகாஷ், கணேஷ் மூர்த்தி
ரூபி திருச்சி வாரியர்ஸ்: முரளி விஜய், பாபா இந்திரஜித், பரத் ஷங்கர், எல். விக்னேஷ், கே. விக்னேஷ், அஸ்வின் கிறிஸ்ட், 
காரைக்குடி காளை: தினேஷ் கார்த்திக், யோ மகேஷ், அனிருதா, ஷாஜஹான், ராஜ்குமார், மோகன் பிரசாத்
மதுரை பாந்தர்ஸ்: ரஹில் ஷா, தலைவன் சற்குணம், ஜே. கெளசிக், அருண் கார்த்திக், சந்திரன், கார்த்திகேயன்
லைகா கோவை கிங்ஸ்: அபினவ் முகுந்த், கே. விக்னேஷ், டி. நடராஜன், ரோஹித், பிரதோஷ், அஜித் ராம், ஆந்தணி தாஸ்
காஞ்சி வீரன்ஸ்: பாபா அபரஜித், சிலம்பரசன், சஞ்சய் யாதவ், சுனில் சாம், அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com