ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அசார் அலி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் அசார் அலி
Published on
Updated on
1 min read

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அசார் அலி இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார். 

33 வயதான அசார் அலி பாகிஸ்தான் அணிக்காக 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருடைய ஆட்டம் சற்று மந்தமாக இருக்கும் என்பதால் அவ்வப்போது விமரிசனத்துக்கு உள்ளாவார். அதற்கேற்றார் போல் அவருடைய ஸ்டிரைக் ரேட்டும் 74.45 ஆக இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடினார். இந்நிலையில், இவர் இன்று ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் லாகூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

"இந்த முடிவை பல யோசனைக்குப் பிறகே எடுத்திருக்கிறேன். முடிவை அறிவிப்பதற்கு முன் தலைமை தேர்வாளர், கேப்டன், கிரிக்கெட் வாரிய தலைவர் ஆகியோரிடம் பேசினேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்த விரும்புகிறேன். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர்கள் வருகின்றனர். அவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். 

அடுத்த ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் நான் இன்னும் சற்று பங்களிக்கவேண்டியுள்ளது. ஆனால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில், அணியில் இருந்து விலக இது தான் சரியான நேரம். 

ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனக்கு ஒருசிலர் ஆதரவு அளிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நான் சிறந்தவன் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்துவது எளிதான காரியம் கிடையாது. ஆனால், கேப்டனாக அதுவும் எனக்கு நல்ல நினைவுகள்" என்றார். 

இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "அடுத்த ஆண்டு இங்கிலாந்து உலகக்கோப்பைக்கான அணி நிர்வாகத்தின் திட்டத்தில் அசார் அலி இல்லை என்பது அவருக்கு நன்றாக தெரிந்துள்ளது. அதனால், அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதே சிறந்தது என்று முடிவு எடுத்திருக்கிறார்" என்றார்.

அசார் அலியின் ஒருநாள் கிரிக்கெட் விவரம்:

போட்டிகள் - 53    
ரன்கள் - 1845
அதிகபட்சம் - 102
சராசரி - 36.9
சதம்/அரைசதம் - 3/12 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com