மும்பை: 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி திங்களன்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இதற்காக அவரும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்கள். அங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் அவர்கள் பிறந்தநாளைக் கழிக்க விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் விராட் கோலியும் கட்டி அணைத்திருக்கும் ஒரு அழகான படத்தை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு தலைப்பாக மிகவும் எளிமையாக, ஆனால் காதல் ததும்பும் வகையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார்.
எளிமையான ஆனால் க்யூட்டான அவரது இந்த வாழ்த்தினை அனைவரும் சிலாகித்துள்ளனர்.இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது படத்திற்கு விருப்பக் குறியீட்டு வாழ்த்தியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி நீதிமன்றத்துக்கு 4-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



