2011 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்ற முனாஃப் படேல் தற்போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நான் விளையாடிய வீரர்களில் தோனியைத் தவிர அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். மற்றவர்கள் விளையாடி நான் மட்டும் ஓய்வு பெற்றால் மட்டுமே வருத்தமாக இருக்கும். எனவே தற்போது வருத்தங்கள் எதுவும் இல்லை. நான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன் என்பதையும் என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு கிரிக்கெட் தவிர எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார் 35 வயது முனாஃப் படேல்.
13 டெஸ்டுகள், 70 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் முனாஃப் படேல். 2006-ல் மொஹலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம்பிடித்தார். 2011-ல், கார்டிஃபில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். எனினும் இந்தியாவுக்கு விளையாடிய ஆட்டங்களில் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகளை முனாஃப் படேல் எடுத்ததில்லை. டெஸ்டில் 4/25 ஒருநாள் கிரிக்கெட்டில் 4/29, டி20யில் 2/25 என்பதே அவருடைய சிறந்த பந்துவீச்சாகும். டெஸ்டில் 35 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 86 விக்கெட்டுகளும் டி20யில் 4 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
முதல் டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகள் (3/72, 4/25) எடுத்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தினார். எனினும் காயம் மற்றும் இதர பந்துவீச்சாளர்களின் ஆட்டத்திறனால் முனவால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்கமுடியாமல் போனது. 2011 உலகக் கோப்பைப் போட்டியில் ஜாகீர் கான், யுவ்ராஜுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்பதால் இவரை மிகவும் மெச்சினார் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிமன்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக ஆட்சி விவசாயிகளுக்கு விரோதமானது: ஈசன் முருகசாமி

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மண்டலத்தில் தோழா்களின் குரல் மீண்டும் ஒலிக்குமா?

வட்டாட்சியா் அலுவலகத்தில் திடீா் தீ விபத்து: 10 வாகனங்கள் கருகி நாசம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


