முகமது சிராஜ் பவுன்சரால் நிலைகுலைந்த நியூஸி. ஏ வீரர்!

இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பவுன்சரால் நியூஸிலாந்து ஏ அணி தொடக்க வீரர் ரூதர்ஃபோர்டு...
முகமது சிராஜ் பவுன்சரால் நிலைகுலைந்த நியூஸி. ஏ வீரர்!

இந்திய ஏ அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பவுன்சரால் நியூஸிலாந்து ஏ அணி தொடக்க வீரர் ரூதர்ஃபோர்டு நிலைகுலைந்து போனார். பிறகு அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

நியூஸிலாந்தின் ஹேமில்டனில் நடைபெற்று வரும் 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாளின் முடிவில் நியூஸிலாந்து ஏ அணி, 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டனும் தொடக்க வீரருமான யங் 117 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் சிராஜ், குர்பானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சயினி 1 விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள். 2-வது நாளன்று மழை காரணமாக ஆட்டம் தொடங்கவில்லை. நாளை மீண்டும் தொடரவுள்ளது.

இந்நிலையில் யங்குடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய 29 வயது ஹமிஷ ரூதர்ஃபோடு, சிராஜ் வீசிய பவுன்சரால் நிலைகுலைந்துபோனார். பவுன்சர் பந்து ரூதர்ஃபோர்டி ஹெல்மெட்டைப் பதம் பார்த்ததால் அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. இதையடுத்து அவர் ரிடையர்ட் ஹர்ட் முறையில் ஓய்வறைக்குத் திரும்பினார். மருத்துவரை ஆலோசித்த பிறகு அவர் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்குவார் என்று சொல்லப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com