சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெல்டா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்த தமிழ் இளைஞர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது...
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெல்டா புயல் பாதிப்பு குறித்த பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்த தமிழ் இளைஞர்கள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள் ஆஸ்திரேலியத் தமிழர்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என மைதானத்தில் இருந்த தமிழ்சுடர், பாலாஜி, வீரமணி, சிவராஜ் ஆகிய நான்கு தமிழ் இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள். மேலும் கஜா புயலுக்கு நிதியுதவி கோரும் வாசகங்களும் பதாகைகளில் இடம்பெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com