திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

முதல் டெஸ்டில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிப்பு: பிருத்வி ஷா அறிமுகம்!

நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக... 

News image
Updated On :3 அக்டோபர் 2018, 5:30 am

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 4-ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி. 

நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடக்க வீரர்களாக ராகுலும் பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். இதையடுத்து பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஷர்துல் தாக்குர் நாளை விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களே போதும் என கோலி முடிவெடுத்தால் ஷர்துல் தாக்குர் நாளைய டெஸ்டில் விளையாட வாய்ப்புண்டு. மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.