அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர் விராட் கோலி தான் என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், உலகின் தலைசிறந்த அதிரடி வீரருமான வீரேந்திர சேவாக், ட்விட்டரில் அதிரடி கருத்துக்களை பதிவிடுவதிலும் கில்லாடி. அவ்வகையில் அந்தந்த நிகழ்வுகளை அடுத்து அவரது ட்வீட்கள் இடம்பெறும்.
இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து தற்போது சேவாக் செய்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர், ஸ்திரத்தன்மையின் மறுபெயர் விராட் கோலி. 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 11 இன்னிங்ஸ்களுக்குள்ளாக 10 ஆயிரம் ரன்களையும் தற்போது கடந்துள்ளார். அதுபோதாது என 37-ஆவது சதத்தையும் பதிவு செய்துள்ளார். கிங் கோலியின் ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


