தியோதர் கோப்பை: குர்பானி, பப்பு ராய் சிறப்பான பந்துவீச்சு! இந்தியா பி 231 ரன்கள்

இந்தியா சி அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்தியா பி அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் மட்டுமே...
தியோதர் கோப்பை: குர்பானி, பப்பு ராய் சிறப்பான பந்துவீச்சு! இந்தியா பி 231 ரன்கள்
Updated on
1 min read

தியோதர் கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 27 அன்று முடிவடையவுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில், 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது இந்தியா பி அணி.

இன்று, இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்தியா சி அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்தியா பி அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விஹாரி கடைசி வரை நிலைத்து விளையாடி 76 ரன்கள் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் விஹாரி,  87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்றைய ஆட்டத்தில் விஹாரி தவிர இதர வீரர்கள் யாராலும் அரை சதம் எடுக்கமுடியவில்லை. இந்தியா சி அணியின் குர்பானி, பப்பு ராய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com