மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஓய்வு பெறுகிறார் அலாஸ்டர் குக்

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 7:26 pm


இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார்.
இரு அணிகளிடையேயான 5-ஆவது டெஸ்டி கிரிக்கெட் போட்டி, ஓவல் மைதானத்தில் வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ùஸக்ஸில் அங்கம் வகித்த அலாஸ்டர் குக், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். 
அலாஸ்டர் குக் தனது ஓய்வு முடிவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக யோசித்து, பலரிடம் கலந்தாலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். இது ஓர் வருத்தமான நாள் என்றாலும், என்னால் முடிந்த வரையில் இங்கிலாந்து அணிக்கு பங்களிப்பு செய்ததை எண்ணி மகிழ்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டின் பல்வேறு முக்கியமான சூழ்நிலைகளில் அங்கம் வகித்தது சிறப்பு மிக்கது.
சக வீரர்களுடன் ஓய்வு அறைச் சூழலை இனி அணுக இயலாது என்பது வருத்தமான ஒன்று என்றாலும், எனது முடிவுக்கு இதுவே சரியான தருணம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு வழிவிட வேண்டிய நேரமிது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை சீர்படுத்திய எஸ்ùஸக்ஸ் அணிக்கும், முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச்சுக்கும் நன்றிகள் என்று அலாஸ்டர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் சீசனில் எஸ்ùஸக்ஸ் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட இருப்பதாக அலாஸ்டர் கூறியுள்ளார்.

Story image


* டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (12,254) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமை அலாஸ்டர் குக் வசமே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.