முதன்மை குத்துச்சண்டை வீரர்கள் குடிசைப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள்: மைக் டைஸன்

நான் உட்பட முதன்மையான குத்துச்சண்டை வீரர்கள் குடிசைப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான் என்று ஜாம்பவான் வீரர் மைக் டைஸன், சனிக்கிழமை தெரிவித்தார். 
முதன்மை குத்துச்சண்டை வீரர்கள் குடிசைப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள்: மைக் டைஸன்

நான் உட்பட முதன்மையான குத்துச்சண்டை வீரர்கள் குடிசைப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான் என்று ஜாம்பவான் வீரர் மைக் டைஸன், சனிக்கிழமை தெரிவித்தார். 

இந்தியாவின் வோர்லி பகுதியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ள மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்புக் கலையின் குமைட் 1 லீக் நடைபெறவுள்ளது. 

இதனை தொடங்கி வைக்க குத்துச் சண்டையின் ஜாம்பவான் வீரர் மைக் டைஸன் இந்தியா வந்துள்ளார். மேலும் அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதன்முறையாகும். மும்பை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்த மைக் டைஸனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

குமைட் 1 லீக் போட்டிகளை தொடங்கி வைத்த பின்னர் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மைக் டைஸன் பேசுகையில்,

உங்கள் வறுமையின் உச்சம் தான் உங்களை சிறந்த குத்துச்சண்டை வீரர்களாக்கும். குடிசைப் பகுதிகளில் இருந்து வருபவர்களால் தான் வெற்றிகரமான சிறந்த குத்துச்சண்டை வீரர்களாக வரமுடியம். ஏனென்றால் குடிசைப்பகுதிகளில் இருந்து வந்த குத்துச்சண்டை வீரர்கள்தான் முதன்மையானவர்களாகவும், சாம்பியன்களாகவும் உள்ளனர்.

நானும் குடிசைப்பகுதியில் வளர்ந்தவன்தான். ஆனால், அங்கிருந்து விரைவில் வெளியே வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டேன். அதுதான் என்னை இந்த இடத்துக்கு முன்னேற வைத்தது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com