முதல் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. 
முதல் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது. அதிகபட்சமாக போராடிய துவக்க வீரர் கீரன் பவல் அதிரடியாக ஆடி 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் மே.இ.தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

3-ஆம் நாளில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து 2-ஆவது டெஸ்ட் போட்டி அக்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com