இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் புதிய பயிற்சியாளர்!

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரர் கிரஹாம் ரீட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்..
இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்குப் புதிய பயிற்சியாளர்!

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரர் கிரஹாம் ரீட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி காலிறுதியோடு வெளியேறியது. இதனால் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங்கை ஹாக்கி இந்தியா நீக்கியது. இதையடுத்து அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆஸி. முன்னாள் வீரர் கிரஹாம் ரீடை தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க ஹாக்கி இந்தியா, சாய் ஒப்புதல் அளித்தன.

சமீபத்தில் நடைபெற்ற சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிப் போட்டியில் வலுகுறைந்த கொரிய அணியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.

இந்நிலையில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வீரர் கிரஹாம் ரீடின் தேர்வு இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ஆஸி அணியில் இடம்பெற்றவர் ரீட். 2009-ல் ஆஸி. அணியின் உதவிப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். பிறகு ஆஸி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார். 2012-ல் ஆஸி. அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றபோது ரீட் தான் பயிற்சியாளர் பதவியை வகித்தார். ஆஸி. அணி நெ.1 இடத்தைப் பிடிக்கவும் உதவினார். 2018-ல் நெதர்லாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் ஆனார். ஆஸி. ஜாம்பவான் ரிக் சார்லஸ்வொர்த்தின் சீடர் ரீட் ஆவார். வரும் 2022 உலகக் கோப்பை போட்டி வரை கிரஹாம் ரீட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனினும் இடையில் நடைபெறும் போட்டிகளில் அவரது செயல்பாடு கணிக்கப்படும். அவரது முதல் சோதனையே 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதாகும்.

பெங்களூரில் நடைபெற்று வரும் சாய் அமைப்பின் ஹாக்கி முகாமில் 54 வயது கிரஹாம் ரீட் இணைந்து பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com