கே. கெளதம் அற்புதமான பந்துவீச்சு: வெற்றி முனைப்பில் இந்திய ஏ அணி! (விடியோ)

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற...
கே. கெளதம் அற்புதமான பந்துவீச்சு: வெற்றி முனைப்பில் இந்திய ஏ அணி! (விடியோ)
Published on
Updated on
1 min read

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி வெற்றி பெற இன்னும் 93 ரன்களே தேவைப்படுகின்றன.

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மே.இ. தீவுகள் ஏ அணி 318 ரன்களும் இந்திய ஏ அணி 190 ரன்களும் எடுத்தன. 128 ரன்கள் முன்னிலை பெற்ற மே.இ. தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 149 ரன்களுக்குச் சுருண்டது. சுனில் அம்ப்ரிஸ் மட்டும் நிலைத்து நின்று 71 ரன்கள் எடுத்து அணிக்கு ஓரளவு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் உள்ளிட்ட 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகியுள்ளார்கள். இந்திய ஏ தரப்பில் 30 வயது கே. கெளதம் 5 விக்கெட்டுகளும் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இந்திய ஏ அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களான பஞ்சால், மயங்க் அகர்வால் ஆகியோர் 40 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றியை நோக்கி நகர உதவியுள்ளார்கள். பஞ்சால் 68 ரன்களும் மயங்க் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். ஈஸ்வரன் 16, அன்மோல்ப்ரீத் சிங் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்த ஆட்டத்தை இந்திய ஏ அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இன்னும் 93 ரன்களே தேவைப்படுகின்றன. முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய ஏ அணி, இந்த ஆட்டத்தையும் வென்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com