டெஸ்ட் போட்டிக்கு உள்ளூர் நடுவர்களை அனுமதிக்க வேண்டும்: விதிமுறையில் மாற்றம் கொண்டு வர ரிக்கி பாண்டிங் கோரிக்கை!

கிரிக்கெட் ஆட்டத்துக்கு வெளிநாட்டு நடுவர்கள் தேவையில்லாத அளவுக்கு நிறைய மாற்றங்கள் உருவாகிவிட்டன...
டெஸ்ட் போட்டிக்கு உள்ளூர் நடுவர்களை அனுமதிக்க வேண்டும்: விதிமுறையில் மாற்றம் கொண்டு வர ரிக்கி பாண்டிங் கோரிக்கை!

ஆஷஸ் தொடர் ஆரம்பித்து இரு நாள்கள் தான் முடிந்துள்ளன. அதற்குள் கள நடுவர்கள் செய்துள்ள 10 தவறுகள் கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஆர்எஸ் உள்ளதால் ஓரளவு தவறுகள் களையப்பட்டாலும் இது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்குமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது.

2002 முதல் எல்லா சர்வதேச ஆட்டங்களுக்கும் வெளிநாட்டு நடுவர்களை நியமிக்கவேண்டும் என்கிற புதிய விதிமுறையை அமல்படுத்தியது ஐசிசி. இதனால் ஆஷஸ் போன்ற முக்கியமான டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து நடுவர்களால் பணிபுரியமுடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு நடுவர்கள் பங்கேற்பது தொடர்பான விதிமுறையை மாற்றி உள்ளூர் நடுவர்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

கிரிக்கெட் ஆட்டத்துக்கு வெளிநாட்டு நடுவர்கள் தேவையில்லாத அளவுக்கு நிறைய மாற்றங்கள் உருவாகிவிட்டன. தொழில்நுட்பங்களை ஏராளமாகப் பயன்படுத்துகிறோம். எனவே இது பெரிய விஷயமில்லை என்பார்கள் மக்கள். நடுவர்களால் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது அது நல்லதாக அமையாது. 

கடந்த சில வருடங்களாக  டிஆர்எஸ் பற்றி நிறைய தவறான கருத்துகள் இருந்தன. ஆனால் இன்று அது உள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து வீரர்கள் நிறைய பேசியுள்ளார்கள். அடுத்த எம்.சி.சி. கூட்டத்தில் இது விவாதிக்கப்படாமல் போனால் அது இடம்பெறுவதற்கான வேலைகளை நான் பார்ப்பேன். 

சிறந்த தொடர்களில் இங்கிலாந்தின் ரிச்சர்ட் கெட்டில்பாரோ போன்ற நல்ல நடுவர்கள் பணியாற்றவேண்டும். அந்த விதிமுறையால் நல்ல நடுவர்கள் முக்கியமான போட்டிகளை இழந்துவிடுகிறார்கள். சைமன் டஃபுல் போல நடுவர்கள் சீக்கிரமாக ஓய்வு பெறுவதையே இது ஊக்குவிக்கும் என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com