
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் ஆக.14 தொடங்கி ஆக.18 வரை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராரி பர்ன்ஸ் 53, ஜானி பேர்ஸ்டோ 52 ரன்கள் சேர்த்தனர். ஆஸி. தரப்பில் கம்மின்ஸ், ஹாசில்வுட், லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்து லார்ட்ஸில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பிராட் 4 விக்கெட்டுகளும், வோக்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
8 ரன்கள் முன்னிலைப் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 258/5 டிக்ளேர் செய்தது. அபாரமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் சதமடித்தார். 11 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் விளாசினார். கம்மின்ஸ் 3, சிடில் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில், 267 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி 5-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 154/6 போராடி டிரா செய்தது. மார்ஸ் லாம்பஷே 59 ரன்கள் சேர்த்தார். ஆர்ச்சர், ஜேக் லீச் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.