
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. இதனால் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கீமோ பால், மே.இ. தீவுகள் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவருக்குப் பதிலாக முதல் டெஸ்டில் இடம்பெற்ற கம்மின்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஒரு மாற்றம் தவிர, மே.இ. தீவுகள் அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2-வது டெஸ்ட், கிங்ஸ்டனில் ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.