இந்திய அணியைக் குறுகிய காலம் கலங்கடித்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஓய்வு!

இந்திய அணியைக் குறுகிய காலம் திணறடித்த இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியைக் குறுகிய காலம் கலங்கடித்த இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஓய்வு!

இந்திய அணியைக் குறுகிய காலம் திணறடித்த இலங்கைச் சுழற்பந்துவீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

34 வயது மெண்டிஸ், கடைசியாக 2015-ல் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார். மொத்தமாக 19 டெஸ்டுகள் விளையாடி 70 விக்கெட்டுகளும் 87 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 152 விக்கெட்டுகளும் 39 டி20 ஆட்டங்களில் விளையாடி 66 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

2008-ல், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் மெண்டிஸ் அறிமுகமானார். அதன்பிறகு நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டி மெண்டிஸை கிரிக்கெட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவுக்கு எதிரான இறுதிச்சுற்றில் 13 ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகள் எடுத்து இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ரெய்னாவும் யுவ்ராஜ் சிங்கும் மெண்டிஸ் பந்தில் போல்ட் ஆன காட்சியை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல 19 ஒருநாள் ஆட்டங்களில் 50 ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இன்றைக்கும் குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவரே முதலிடத்தில் உள்ளார். 

அதன்பிறகு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி, இந்தியாவை 2-1 என வென்றது. முரளிதரனும் மெண்டிஸும் இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளமிட்டார்கள். 3 டெஸ்டுகளில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் மெண்டிஸ். இதனால் இந்திய ரசிகர்கள் மத்தியில் விரைவில் கவனம் பெற்றார். 

2014 வரை இலங்கை அணியில் தொடர்ந்து இடம்பெற்ற மெண்டிஸ், அதன்பிறகு ஃபார்மை இழந்தார். மேலும் காயங்களும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்னடைவாக அமைந்தன. இதனால் இலங்கை அணியின் தேர்வுக்குழுவின் பார்வையிலிருந்து முற்றிலும் விலகினார். இப்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com