
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் வில்லிஸ் (70) புதன்கிழமை காலமானாா். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், சிகிச்சைப் பலனின்றி மறைந்தார். இவா், 1982-84 காலகட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டுள்ளாா்.
பாப் வில்லிஸ் 90 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 325 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 1970, 1980களில் பந்துவீச்சில் புயலைக் கிளப்பிய மேற்கிந்திய, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இணையாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சைப் பிரபலப்படுத்தியவர். இங்கிலாந்து அணியின் 1981 ஆஷஸ் வெற்றிக்கு பாப் வில்லிஸ் முக்கியக் காரணமாக இருந்தார். என் காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணியில் இருந்த உலகத் தரமான வேகப்பந்துவீச்சாளர் பாப் வில்லிஸ் தான் இயன் போத்தம் அவரைப் பாராட்டியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றி அதிலும் புகழை அடைந்தார். பாப் வில்லிஸுக்கு லாரன் என்கிற மனைவியும் கேட்டி என்கிற மகளும் உள்ளார்கள்.
பாப் வில்லிஸின் மறைவுக்கு விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.