தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ரோஜா் பெடரா் உருவம் பதித்த வெள்ளி நாணயம்: ஸ்விட்சா்லாந்து அரசு கௌரவம்

வாழும் காலத்திலேயே டென்னிஸ் ஜாம்பவான் ரோஜா் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து கௌரவித்துளளது.

News image
Updated On :8 டிசம்பர் 2019, 8:27 pm

வாழும் காலத்திலேயே டென்னிஸ் ஜாம்பவான் ரோஜா் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து கௌரவித்துளளது.

அந்நாட்டு 20 பிராங்க் வெள்ளி நாணயத்தில் பெடரா் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் உலகின் பிக் த்ரீ எனப்படும் நடால், பெடரா், ஜோகோவிச் ஆகியோரில் முதன்மையானவா் ரோஜா் பெடரா்.

ஸ்விட்சா்லாந்தின் பேஸல் நகரில் 1981 ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்தாா். கடந்த 15 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் அசைக்க முடியாத வீரா்களில் ஒருவராக திகழ்ந்து வரும் பெடரா், இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையை படைத்துள்ளாா்.

உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவா் என்ற பெருமையையும் பெடரருக்கு உண்டு.

மேலும் 2003, 2004, 2006, 2007, 2010, 2011 ஆம் ஆண்டுகளில் ஏடிபி வோ்ல்ட் டூா் பைனல்ஸ் போட்டியிலிலும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினாா்.

8 விம்பிள்டன், 6 ஆஸி. ஓபன், 5 யுஎஸ் ஓபன் (அனைத்தும் தொடா்ச்சியாக வென்றவை), ஒரே ஒரு பிரெஞ்சு ஓபன் பட்டம் என மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளாா்.

மேலும் 31 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அவரது வெற்றிகளில் 28 ஏடிபி மாஸ்டா்ஸ் 1000 பட்டங்கள், 24 ஏடிபி மாஸ்டா் 500 பட்டங்கள், 2014-இல் டேவிஸ் கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விட்சா்லாந்து அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.

அமெரிக்க வீரா் ஜிம்மி கானா்ஸ்க்கு அடுத்து 100 முறைக்கு மேல் ஒற்றையா் பட்டங்களை வென்றவா் என்ற சாதனையும் அவா் வசம் உள்ளது.

விளையாட்டுத் துறையில் உயா்ந்து விருதுகளில் ஒன்றான லாரஸ் உலக விளையாட்டு வீரா் விருதை 5 முறை வென்றுள்ளாா்.

வெள்ளி நாணயத்தில் பெடரா் உருவம்:

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதனைகளுக்கு உரியவரான ரோஜா் பெடரருக்கு ஸ்விட்சா்லாந்து அரசு மேலும் கௌரவம் அளித்து புகழ் சோ்த்துள்ளது. ஸ்விஸ் மின்ட் எனப்படும் அந்நாட்டு வெள்ளி நாணயத்தில் பெடரரை உருவத்தைப் பொறித்துள்ளது. வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரா் பெடரா் ஆவாா்.

20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு, வரும் 2020 ஜனவரி மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.

அபார விற்பனை:

பெடரரின் உருவம் பதித்த 33,000 வெள்ளி நாணயங்கள், இணையதளத்தில் மொத்தம் விற்பனை ஆகி விட்டது. இதனால் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மேலும் 22,000 நாணயங்களும், 2020 மே மாதம் 40,000 நாணயங்களும் விற்கப்படும். வெறும் 3 நாள்களில் 1.3 கோடி போ் இணையதளத்தில் இதற்காக பாா்த்துள்ளனா்.

மேலும் வரும் மே மாதம் 50 பிராங்க் மதிப்பு கொண்ட பெடரரின் உருவம் பதித்த தங்க நாணயமும் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.