இந்தப் பக்கம் கோலி, அந்தப் பக்கம் போலார்ட்: மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர்கள் ஆன கேப்டன்கள்!

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.
இந்தப் பக்கம் கோலி, அந்தப் பக்கம் போலார்ட்: மோசமான சாதனைக்குச் சொந்தக்காரர்கள் ஆன கேப்டன்கள்!


இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்தது.

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தினாலும், இந்தியக் கேப்டன் விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். அவர் தான் களமிறங்கிய முதல் பந்திலேயே போலார்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 388 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் கேப்டன் போலார்ட்டும் இந்தியக் கேப்டன் விராட் கோலிபோல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

இதன்மூலம் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு விராட் கோலியும், கைரன் போலார்டும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து இந்த ஆட்டத்தில் மோசமான ஒரு சாதனையைப் படைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com