இந்திய அணியில் தொடரும் சோகம்: மாற்றம் எப்போது?

கடந்த சில கிரிக்கெட் ஆட்டங்களாகவே பீல்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணி, 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் சொதப்பல் பீல்டிங்கையே வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் தொடரும் சோகம்: மாற்றம் எப்போது?


கடந்த சில கிரிக்கெட் ஆட்டங்களாகவே பீல்டிங்கில் சொதப்பி வரும் இந்திய அணி, 3-வது ஒருநாள் ஆட்டத்திலும் சொதப்பல் பீல்டிங்கையே வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இன்னிங்ஸிலும் இந்திய அணி மோசமான பீல்டிங்கையே வெளிப்படுத்தியுள்ளது. 

நவ்தீப் சைனி வீசிய 9-வது ஓவரில் எவின் லீவிஸ் கொடுத்த கடினமான கேட்ச் வாய்ப்பை ரவீந்திர ஜடேஜா தவறவிட்டார். அப்போது லீவிஸ் 12 ரன்களில் பேட் செய்து வந்தார். இருப்பினும், அவர் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா சுழலில் சைனியிடமே கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ஜடேஜா வீசிய 25-வது ஓவரில் ஷிம்ரோன் ஹெத்மயர் 9 ரன்களில் பேட்டிங் செய்து வந்தார். அப்போது அவர் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ரிஷப் பந்த் தவறவிட்டார். தொடர்ந்து, சைனி வீசிய 30-வது ஓவரில் ஹெத்மயர் 37 ரன்களில் பேட்டிங் செய்து வந்தார். அப்போது, ஃபைன் லெக் பகுதியில் இருந்த குல்தீப் யாதவ் ஹெத்மயர் கேட்ச்சைத் தவறவிட்டார்.

இதேபோல் குல்தீப் யாதவ் சுழலில் ராஸ்டன் சேஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பேட்டிங் செய்து வந்தபோது, ரிஷப் பந்த் சேஸ் கொடுத்த கேட்ச்சைத் தவறவிட்டார்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணி என்ற பெயர் எடுத்து வரும் இந்திய அணி குறிப்பாக பீல்டிங்கிலும் தலைசிறந்த அணிதான் என்றே பெயர் எடுத்து பீல்டிங்குக்கென்று ஒரு முத்திரையைப் பதிந்து வைத்திருந்தது. 

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுடனான டி20 தொடர் மற்றும் முதலிரண்டு ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி பீல்டிங்கில் சொதப்பி வருகிறது. எனவே, இந்திய அணியில் நீடிக்கும் பீல்டிங் சொதப்பல் அடுத்தடுத்த தொடர்களுக்கு முன் சரி செய்யப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com