
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் ஆட்டத்தில் ராயுடு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் 4-1 என தொடரையும் கைப்பற்றி, நியூஸி மண்ணில் பெரிய வெற்றியை வசமாக்கியது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு தொடரில் இந்தியா ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து அணி 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி வெற்றி பெற்ற நிலையில் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
இந்நிலையில் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் காயம் காரணமாக இடம்பெறாத மார்டின் கப்தில், டி20 தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
புதனன்று வெலிங்டனில் டி20 தொடர் தொடங்குகிறது. இதிலிருந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் நியூஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 13 முதல் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் கப்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.