திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

உலகக் கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அஹமது நீடிப்பார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

உலகக் கோப்பைப் போட்டி வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அஹமது நீடிப்பார் என... 

News image
Updated On :5 பிப்ரவரி 2019, 10:54 am

எழில்

உலகக் கோப்பைப் போட்டி வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அஹமது நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மணி கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:

உலகக் கோப்பைப் போட்டி வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அஹமது நீடிப்பார் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். இதை முதல் நாளிலிருந்து சொல்லிவருகிறேன். சர்ஃபராஸ் எங்கள் கேப்டன். வேறு எதுவும் முடிவு எடுக்கப்படும்வரை கேப்டனாக அவரே நீடிப்பார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் ஆனதும் டி20 தரவரிசையில் முதல் இடம் பிடித்ததும் சர்ஃபராஸின் சாதனைகள். உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்க அவர் ஆர்வமாக உள்ளார் என இஷான் மணி கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.