அட! விளையாடிய 10 ரஞ்சி இறுதிப் போட்டிகளிலும் வெற்றி அடைந்துள்ள வாசிம் ஜாஃபர்!

இதுவரை விளையாடிய 10 ரஞ்சி இறுதிப் போட்டிகளிலும் அவர் பங்கேற்ற அணிகள் கோப்பையை வென்றுள்ளன...
அட! விளையாடிய 10 ரஞ்சி இறுதிப் போட்டிகளிலும் வெற்றி அடைந்துள்ள வாசிம் ஜாஃபர்!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி போட்டி இறுதி ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது விதர்பா அணி. ரஞ்சி போட்டி வரலாற்றில் 6-வது முறையாக ஓர் அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் செளராஷ்டிரா அணி தோற்கும் மூன்றாவது இறுதிப் போட்டி இது. 2012-13 மற்றும் 2015-16 ஆகிய சீஸன்களில் மும்பையிடம் இறுதிச்சுற்றில் தோற்றுள்ளது.

இந்நிலையில் விதர்பா அணிக்காக மூத்த வீரர் வாசிம் ஜாஃபர் விளையாடிய இரு வருடமும் அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. மேலும் வாசிம் ஜாஃபர் இதுவரை விளையாடிய 10 ரஞ்சி இறுதிப் போட்டிகளிலும் அவர் பங்கேற்ற அணிகள் கோப்பையை வென்றுள்ளன. 8 முறை மும்பை அணிக்காகவும் 2 முறை விதர்பா அணிக்காகவும். 

இந்த வெற்றியின் மூலம் வாசிம் ஜாஃபர் நிகழ்த்தியுள்ள சாதனைகள்: 

* 149 ரஞ்சி ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ரஞ்சி வரலாற்றில் வேறெந்த வீரரும் இத்தனை ஆட்டங்களில் விளையாடியதில்லை. 145 ஆட்டங்கள் விளையாடிய மத்தியப் பிரதேசத்தின் தேவேந்திர பண்டேலாவின் சாதனையை இந்த சீஸனில் முறியடித்தார்.

* ரஞ்சிப் போட்டியில் 11000 ரன்கள் எடுத்த ஒரே வீரர், வாசிம் ஜாஃபர். 

* இரு ரஞ்சி சீஸன்களில் 1000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் வாசிம் ஜாஃபர். 2008-09-ல் மும்பைக்காக 1260 ரன்களும் இந்த சீசனில் விதர்பாவுக்காக 1037 ரன்களும் எடுத்துள்ளார். ரஞ்சிப் போட்டியில் ஒரு சீஸனில் ஆயிரம் ரன்களுக்கு அதிகமாக எடுத்த முதல் விதர்பா வீரர் என்கிற பெருமையும் ஜாஃபருக்குத்தான் உண்டு. 

* அதிகமுறை ரஞ்சி வெற்றிகளில் பங்கேற்ற வீரர்கள்

12 அஷோக் மன்கட் 
11 அஜித் வடேகர்
10 மனோஹர் ஹர்திகர்/திலிப் சர்தேசாய்/வாசிம் ஜாஃபர் 

வாசிம் ஜாஃபரின் 10 ரஞ்சி வெற்றிகள்

மும்பைக்காக

1996-97: வெற்றி 
1999-00: வெற்றி 
2002-03: வெற்றி 
2003-04: வெற்றி 
2006-07: வெற்றி 
2008-09: வெற்றி 
2009-10: வெற்றி 
2012-13: வெற்றி 

விதர்பாவுக்காக 

2017-18: வெற்றி
2018-19: வெற்றி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com