ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி பிப்ரவரி 15 அன்று தேர்வு! 

அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன...
ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி பிப்ரவரி 15 அன்று தேர்வு! 
Updated on
1 min read

நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. 

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஏற்கஎனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் நியூஸி. 80 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து, தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

இதையடுத்து அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன.

இந்நிலையில் வரும் 15 அன்று மும்பையில் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி இந்திய அணியைத் தேர்வு செய்யவுள்ளது. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு இந்திய அணி கடைசியாக விளையாடவுள்ள சர்வதேசத் தொடர்கள் இவை என்பதால் உலகக் கோப்பையை மனத்தில் வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். மேலும் வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூஸிலாந்து தொடரின் பிற்பகுதியில் ஓய்வு எடுத்துக்கொண்ட விராட் கோலி, இந்தத் தொடரில் முழுமையாகப் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com