வருவோம், வெல்வோம், செல்வோம்: பிரபல சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!

வந்தோம், வென்றோம், சென்றோம். வருவோம், வெல்வோம், செல்வோம்...
வருவோம், வெல்வோம், செல்வோம்: பிரபல சிஎஸ்கே வீரர் நம்பிக்கை!

ஐபிஎல் (2019) 12-ஆவது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. மார்ச் 23-ஆம் தேதி நடக்கவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த அட்டவணை முதல் 2 வாரங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை 17 ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்டங்களின் அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் 2019 தேதிகளுக்கு பின் தெரியவரும். தேர்தல் தேதிகள் வெளியானவுடன், முதல் இரண்டு வாரங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, சீசனின் மீதமுள்ள ஆட்டங்களுக்கான அட்டவணை, உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் இணைந்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரபல வீரர் இம்ரான் தாஹிர் ட்விட்டரில் கூறியதாவது:

என் இனிய தமிழ் மக்களே நலமா? களம் இறங்குகிறோம் மார்ச் 23 நமது கோட்டையில். வந்தோம், வென்றோம், சென்றோம். வருவோம், வெல்வோம், செல்வோம். இந்த வருஷம் எங்க காளியோட ஆட்டத்தைப் பார்ப்பீங்க. கொல காண்டுல வர்றோம். செண்டிமெண்ட் இருக்கிறவன் குறுக்கே வராதீங்க என்று துள்ளலுடன் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com