
சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஆஸி. அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஃபிஞ்சை 6 ரன்களில் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். விக்கெட் கீப்பர் கேரி நன்குத் தொடங்கினார். ஆனால், 24 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கவாஜாவும் ஷான் மார்ஷும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். 22.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலிய அணி. 70 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, 59 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் 42, ஹேண்ட்ஸ்காம்ப் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.