இன்னும் அதிரடியாக விளையாடியிருக்கலாமோ?: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 324 ரன்கள் குவிப்பு!

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது... 
இன்னும் அதிரடியாக விளையாடியிருக்கலாமோ?: 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 324 ரன்கள் குவிப்பு!

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. 

பேட்டிங்குக்குச் சாதகமான மெளண்ட் மெளன்கனி மைதானத்தில் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும் தவனும் 25.2 ஓவர்களில் 154 ரன்கள் குவித்தார்கள். தவன் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 87 ரன்களுக்கு ஃபெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 30-வது ஓவரின்போது இந்திய அணியின் ஸ்கோர் 172 என இருந்தபோது அவர் வெளியேறினார். நல்ல நிலைமையில் இருந்ததால் அதன்பிறகு விராட் கோலியும் ராயுடுவும் விரைவாக ரன்கள் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி - ராயுடு ஜோடி கிட்டத்தட்ட 10 ஓவர்கள் விளையாடி 64 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 350 ரன்கள் எடுப்பது கடினம் என அப்போதே கணிக்கப்பட்டது. விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரன் எடுக்கும் வேகம் இன்னும் குறைந்தது. ராயுடுவும் தோனியும் 39 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். 49 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து 46-வது ஓவரில் ஆட்டமிழந்தார் ராயுடு.

எனினும் கடைசிக்கட்டத்தில் தோனியும் தவனும் அதிரடியாக விளையாடி ஒரு நல்ல ஸ்கோரை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்தார்கள். இருவரும் 26 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தோனி 33 பந்துகளில் 48 ரன்களும் ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com