சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பரபரப்பான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணியைத் தோற்கடித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி!

5 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரை 4-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது இந்திய ஏ அணி... 

News image
Updated On :31 ஜனவரி 2019, 10:45 am

எழில்

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 122 ரன்கள் இலக்கு. ஆனால் இந்திய ஏ அணி, அந்த அணியின் 8-வது விக்கெட்டை 95 ரன்களிலும் 9-வது விக்கெட்டை 114 ரன்களிலும் வீழ்த்தியது. இதனால் இந்திய ஏ அணியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரபரப்பான முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் கடைசியில் இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய டக்கட், அணியின் வெற்றியை நிலைநாட்டினார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ஓவர்களில் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய ஏ அணி. சித்தேஷ் லாட் 36 ரன்களும் அக்‌ஷர் படேல் 23 ரன்களும் எடுத்தார்கள். கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே கிரேகோரி பந்துவீச்சில் போல்ட் ஆனார். ஓவர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோசமாக பேட்டிங் செய்து, முதல் 8 விக்கெட்டுகளை 95 ரன்களுக்கு இழந்தது. 4-ம் நிலை வீரரான டக்கெட் மட்டும் சிறப்பாக விளையாடி அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார். 9-வது விக்கெட் பறிபோனபோது ஸ்கோர் - 114. வெற்றிக்கு இன்னும் 8 ரன்கள் மீதமுள்ள நிலையில் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தேடித் தந்தார் டக்கெட். அவர் 86 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், 30.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து லயன்ஸ் அணி. இந்தியத் தரப்பில் தீபக் சஹார், ராகுல் சஹார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

எனினும், 5 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி 4-1 என்கிற கணக்கில் வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.