இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா? சர்ஃப்ராஸ் விளக்கம்

இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது விளக்கமளித்துள்ளார். 
இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா? சர்ஃப்ராஸ் விளக்கம்

இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது விளக்கமளித்துள்ளார். 2019 உலகக் கோப்பையில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற நிலையில், இங்கிலாந்திடம் மட்டுமே தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் தனது அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இந்த ஆட்டத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றிருந்தால், பாகிஸ்தானின் அரையிறுதிக் கனவு மேலும் பிரகாசமாகியிருக்கும். இந்தப் போட்டியில் இந்தியாவின் தோல்வி பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து நாடு திரும்பிய பின்னர் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் சிறந்த வீரர். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. குறிப்பாக இந்தியா உடனான தோல்வி மிகப்பெரிது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானோம். இருப்பினும் அடுத்த 4 ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். 

லீக் போட்டிகளுடன் வெளியேறியதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பதை கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள அனைவரும் இளம் வீரர்கள்.

எனவே உலகக் கோப்பையில் பெற்ற தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பாகிஸ்தான் அணியை திறம்பட வழிநடத்த விரும்புகிறேன். அதன்மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்வேன். 2020-ல் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குள் நாங்கள் சிறப்பாக செயல்படத் துவங்குவோம்.

இங்கிலாந்துடனான போட்டியில் இந்தியா வேண்டுமென்றே தோல்வியடையவில்லை. அந்தப் போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது என்பது தான் உண்மை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com