தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியது பிசிசிஐ!

தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியது பிசிசிஐ!

தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ...

தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.

பிசிசிஐ அமைப்பு இதுகுறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,

தலைமைப் பயிற்சியாளர்
பேட்டிங் பயிற்சியாளர்
பந்துவீச்சுப் பயிற்சியாளர்
ஃபீல்டிங் பயிற்சியாளர்
பிஸியோதரபிஸ்ட்
ஸ்டிரந்த் அண்ட் கண்டிங்ஷனிங் பயிற்சியாளர்
நிர்வாக மேலாளர்

ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது பிசிசிஐ.

தற்போது, இப்பதவிகளை வகிக்கும் நபர்கள், தேர்வு நடைமுறையில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் பதவிக்காலம் மேற்கிந்தியத் தீவுகள் தொடருடன் முடிவடையவுள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு 45 நாள்கள் நீடிப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குப் பிறகு இந்தியாவின் உள்ளூர் சீஸன் செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது. 

உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் டிரெய்னர் சங்கர் பாசு மற்றும் பிஸியோதரபிஸ்ட் பாட்ரிக் ஃபர்ஹட்ஆகியோர் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளார்கள். 

மேலே குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசித் தேதி - ஜூலை 30. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com