தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து மனப்பூர்வமாக விலகுகிறேன்: இன்ஸமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து விருப்பத்துடன் விலகுவதாக முன்னாள் கேப்டன் இன்ஸமாம்-உல்-ஹக் தெரிவித்தார். 
தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து மனப்பூர்வமாக விலகுகிறேன்: இன்ஸமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து விருப்பத்துடன் விலகுவதாக முன்னாள் கேப்டன் இன்ஸமாம்-உல்-ஹக் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முழுமனதுடன் செயல்பட்டுள்ளேன். எனவே இம்மாதத்துடன் நிறைவடையும் எனது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. எனவே இதிலிருந்து மனப்பூர்வமாக விலகுகிறேன். 

டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023-ல் உலகக் கோப்பை ஆகியவை நடைபெறவுள்ள சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதுமையான யோசனைகளைக் கொண்ட புதிய தேர்வுக்குழுத் தலைவரை நியமிக்க இதுவே சரியான தருணமாகும்.

அணித் தேர்வில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து தேர்வுக்குழுவினருக்கும், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மற்றும் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டான நேரங்களிலும் அனைவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். புதிய தேர்வுக்குழுவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவராக இன்ஸமாம் இருந்த காலகட்டத்தில் அந்த அணி 2017 சாம்பியன்ஸ் டிராபி வென்றதுடன், டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து பரவலான விமர்சனங்களின் மத்தியில் இன்ஸமாம் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com