
சந்திரயான்-2 விண்கலத்துடன் ஏவப்பட்ட இந்தியாவின் மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-எம்1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக திங்கள்கிழமை பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, திட்டமிட்டபடி திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட மிகுந்த சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மிகுந்த சப்தத்துடன் நெருப்பையும், புகையையும் கக்கியபடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து மேலெழும்பியது.
ஏவப்பட்ட 5 நிமிடங்கள் 18 விநாடிகளில் அதன் கிரையோஜெனிக் என்ஜின் பற்றவைக்கப்பட்டு, அடுத்த நிலைக்கு ராக்கெட் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடங்கள் 23 விநாடிகளில் ராக்கெட்டிலிருந்து சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக பிரித்துவிடப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கேப்டன் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பலர் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர்.
இதுகுறித்து முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்தது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில்,
சில நாடுகள் தங்களின் தேசியக் கொடியில் சந்திரனைக் கொண்டுள்ளன. ஆனால், சில நாடுகளின் தேசியக் கொடி மட்டும் தான் சந்திரனில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Some countries have moon on their flags
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.