ஐசிசி நடுவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய நடுவர்!

2019-20-ம் ஆண்டுக்கான நடுவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்... 
ஐசிசி நடுவர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்திய நடுவர்!

2019-20-ம் ஆண்டுக்கான நடுவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

முதன்மையான கள நடுவர் பட்டியலில் இருந்து இந்திய நடுவர் எஸ். ரவி நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைசியாக நடுவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் ஐயன் குட். இதையடுத்து முதல்தர நடுவர் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் கெளவ், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜோயல் வில்சன் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 

அலீம் டர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃபானி, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, நிஜல் லாங், ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட், பால் ரீஃபில், ராட் டக்கர் போன்றோரும் கள நடுவர் பட்டியலில் உள்ளார்கள். 

இதுதவிர ஆட்ட நடுவர் பட்டியலில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் இந்தியாவின் ஜவகல் ஸ்ரீநாத். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com