பிரத்வயிட் போராட்டம் வீண்: 5 ரன்னில் நியூஸி. த்ரில் வெற்றி

மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, தனியொருவனாகப் போராடினார் கார்லஸ் பிரத்வயிட் சதம் விளாசினார்.
பிரத்வயிட் போராட்டம் வீண்: 5 ரன்னில் நியூஸி. த்ரில் வெற்றி

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகள் சனிக்கிழமை மோதின. மான்சஸ்டரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்ஸன் 154 பந்துகளில் 14 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 148 ரன்கள் குவித்தார். ராஸ் டெய்லர் 69 ரன்கள் சேர்த்தார். அபாரமாக பந்துவீசிய ஷெல்டன் காட்ரல் 10 ஓவர்களில் 1 மெய்டன் உடன் 54 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு கிறிஸ் கெயில் அதிரடி துவக்கத்தை ஏற்படுத்தினார். 84 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ஹெத்மேய்ர் 54 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, தனியொருவனாகப் போராடினார் கார்லஸ் பிரத்வயிட் 82 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் விளாசினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் பிரத்வயிட்டுக்கு முதல் சதமாகும். 

வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், சிக்ஸர் அடிக்க முயன்று போல்ட் பிடித்த அற்புதமான கேட்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இதையடுத்து மே.இ.தீவுகள் 49 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 5 ரன்களில் த்ரில் வெற்றிபெற்றது. நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸன் ஆட்டநாகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com