ஐபிஎல்: இன்று கொல்கத்தா-பஞ்சாப் மோதல்

அஸ்வின் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் புதன்கிழமை மோதுகின்றன.
IPL 2019 Live Streaming KKR vs KXIP
IPL 2019 Live Streaming KKR vs KXIP
Published on
Updated on
1 min read

அஸ்வின் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் புதன்கிழமை மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் ஆட்டத்தில் வென்ற உத்வேகத்துடன் பஞ்சாப் உள்ளது. அதே நேரத்தில் ரஸ்ஸலின் 19 பந்துகளில் 49 ரன்கள் என்ற அபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது கொல்கத்தா. 
இரு அணிகளும் ஏறக்குறைய சமபலத்துடனே உள்ளன. பஞ்சாப் அணி அதிரடி பேட்ஸ்மேன் கெயில், ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், நிக்கோலஸ்,  ஆகியோரை நம்பி உள்ளது. பந்து வீச்சில் அஸ்வின், சாம் கர்ரன், முகமது ஷமி, முஜிப்பூர் ரஹ்மான் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக், உத்தப்பா, நிதிஷ் ராணா, கிறிஸ் லீன், ரஸ்ஸல், ஆகியோர் பேட்டிங்கிலும், பிராத்வொயிட், சுனில் நரைன், சாவ்லா, குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கின்றனர். சுனில் நரைன் விரல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். 
இந்த ஆட்டத்துடன் வரும் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வெளியூர் மைதானங்களில் ஆட வேண்டும். மேலும் ஏப்ரல் 12-ஆம் தேதி தில்லியுடன் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவில் மோதுகிறது.

இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா. நேரம்: இரவு 8.00.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com