எங்களுக்கு அதிக வயதாகவில்லை: பிராவோ

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 60 வயது ஆகிவிடவில்லை என்று அந்த அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்தார்.
ipl 2019 Dwayne Bravo
ipl 2019 Dwayne Bravo
Published on
Updated on
1 min read


சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 60 வயது ஆகிவிடவில்லை என்று அந்த அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோ தெரிவித்தார்.
தில்லி கேபிடல்ஸ் அணியை சிஎஸ்கே அணி கடந்த செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார் பிராவோ.
பொதுவாகவே சிஎஸ்கே அணி அனுபவம் வாய்ந்த பல மூத்த வீரர்களை உள்ளடக்கியுள்ளது. இதனால், வயதான அணி என்ற விமர்சனத்துக்கும் ஆளாகி வருகிறது. இருப்பினும், கடந்த ஐபிஎல் போட்டியில் மகுடம் சூடியது. இந்த ஆட்டத்திலும் தொடர்ந்து 2 வெற்றிகளை ருசித்துள்ளது.
இந்நிலையில், வயது குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிராவோ கூறியதாவது: சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு 60 வயதாகிவிடவில்லை. எங்களுக்கு 32இல் இருந்து 35 வயதுதான் ஆகிறது. சந்தேகம் இருந்தால் நீங்கள் கூகுளில் தேடிப் பாருங்கள். நாங்கள் இளம் வீரர்கள்தான். அதிக அனுபவத்தை கொண்டு விளையாடி வருகிறோம்.
எங்களுக்கு ஆட்டத்தில் என்ன பலவீனம் உள்ளது என்பது தெரியும். உலகின் மிகச் சிறந்த கேப்டனின் கீழ் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம் என்றார் அவர்.
ஆட்டத்தின்போது உத்திகளை அணியாக இணைந்து பயன்படுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு, நாங்கள் எந்த உத்திகளையும் பயன்படுத்தவில்லை. குழுவாக இணைந்து கலந்தாலோசிக்கவும் மாட்டோம். மைதானத்தில் நேரடியாக இறங்கி சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவோம். கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு பிரத்யேக பாணி உள்ளது. இதேபோல், அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தனித்துவம் இருக்கிறது. பந்துவீசும் போது சில ஆலோசனைகளை வழங்குவார் தோனி. அவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் எந்த மாதிரியான பந்துவீச்சு தேவை என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இதுபோன்ற டி20 லீக் ஆட்டங்களில் விளையாடி வருகிறேன். 
இன்னமும் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டு வருகிறேன். என்னுடைய திறமையையும் வளர்த்து வருகிறேன் என்று பதிலளித்தார் பிராவோ.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டரான பிராவோ, கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com