முதல்முறையாக ஜோடி சேர்ந்து சாதனைகள் நிகழ்த்தியுள்ள ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி!

முதல்முறையாக ஜோடி சேர்ந்து சாதனைகள் நிகழ்த்தியுள்ள ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி!

ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது...
Published on

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். ரோஹித் சர்மா 176 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

மூன்று டி20, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக தென் ஆப்பிரிக்கா வந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தோ்வு செய்தாா். இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரா்களாக மயங்க் அகா்வாலும், ரோஹித் சா்மாவும் களம் இறங்கினா். இருவரும் அருமையாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்கள். சிக்ஸர் அடிக்க முயன்று மஹாராஜ் பந்தில் ஸ்டம்பிங் ஆகி 176 ரன்களில் வெளியேறினார் ரோஹித் சர்மா.

இந்நிலையில் ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் ஜோடி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அதன் விவரம்:

டெஸ்ட் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்த இந்திய ஜோடி 

413 ரன்கள் மன்கட்/ராய் vs நியூஸிலாந்து
410 டிராவிட்/சேவாக் vs பாகிஸ்தான்
317 மயங்க்/ரோஹித் vs தென் ஆப்பிரிக்கா

முதல்முறையாக இணைந்து அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர்கள்

410 - சேவாக் - டிராவிட், 2006
317 - ரோஹித் - மயங்க், 2019
289 - தவன் - விஜய், 2013
276 - சி டெம்ப்ஸ்டர் - ஜே மில்ஸ், 1930
260 - பி மிட்செல் - ஜே சிடில், 1931
254 - கெய்ல் - பவல், 2012

இரு இந்தியத் தொடக்க வீரர்களும் சதமடித்தபோது... 

மெர்சண்ட் - முஷ்டாக் அலி vs இங்கிலாந்து (1936)
மன்கட் - ராய் vs நியூஸிலாந்து (1956)
கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் vs ஆஸ்திரேலியா (1986)
சேவாக் - டிராவிட் vs பாகிஸ்தான் (2006)
ஜாஃபர் - தினேஷ் கார்த்திக் vs வங்கதேசம் (2007)
சேவாக் - கம்பீர் vs இலங்கை (2009)
தவன் - விஜய் vs ஆஸ்திரேலியா (2013), வங்கதேசம் (2015), ஆப்கானிஸ்தான் (2018)
ரோஹித் சர்மா - மயங்க் அகர்வால் vs தெ.ஆ. (2019)

* ரோஹித் - மயங்க் கூட்டணி 9 சிக்ஸர்களை அடித்துள்ளது. ரோஹித் 6, மயங்க் 3. முதல்முறையாக இந்திய அணியின் தொடக்கக் கூட்டணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 சிக்ஸர்களுக்கு அதிகமாக அடித்துள்ளது. 

* இந்தியாவில் தொடர்ச்சியாக 50+ ஸ்கோர்களை அடித்த ரோஹித் சர்மா

82, 51*, 102*, 65, 50*, 176.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக ஒரே இன்னிங்ஸில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தவிர வேறு ஒரு நாட்டைச் சேர்ந்த தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்துள்ளார்கள்.  

* 2008-ல் சென்னையில் நடந்த டெஸ்டில் சேவாக் - டிராவிட் கூட்டணி 2-வது விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்ததே எந்தவொரு விக்கெட்டுக்கும் இந்திய அணி சார்பாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தன. அதைக் கடந்து 317 ரன்கள் வரை எடுத்து சாதனை செய்துள்ளது ரோஹித் - மயங்க் கூட்டணி.

டெஸ்டில், முதல்முறையாகத் தொடக்க வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் 

201* பி குருப்பு vs நியூஸிலாந்து, கொழும்பு 1987/87
200 ஜி ஸ்மித் vs வங்க தேசம், கிழக்கு லண்டன் 2002/03
187 தவன் vs ஆஸ்திரேலியா, மொஹலி 2012/13
176 ரோஹித் சர்மா vs தென் ஆப்பிரிக்கா, விசாகப்பட்டினம் 2019/20

இரு தொடக்க வீரர்களும் சதமடித்தது...

* இத்துடன் சேர்த்து பத்து தடவை இந்தியத் தொடக்க வீரர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார்கள்.
* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்பது தடவை இதுபோல நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com