3 முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களை வென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறாமல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்த அணி ஏற்கெனவே 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெறவில்லை.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் நடைபெற்ற 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 1-6 எனத் தோற்றதன் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது பாகிஸ்தான் ஹாக்கி அணி. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்துள்ளது.
1960, 1968, 1984 ஆகிய ஒலிம்பிக் போட்டிகளில் பாகிஸ்தான் ஹாக்கி அணி தங்கங்களை வென்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தான் அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்றது, 1992 பார்சிலோனாவில். அப்போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கி அணி, வெண்கலம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


