மேட்ச் ஃபிக்ஸிக் முறைகேடு புரிய அணுகியவா்கள் தொடா்பாக தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக வங்கதேச டி20, டெஸ்ட் அணி கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு முழு தடையும், 12 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையும் அளிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மஹ்முதுல்லா டி20 அணியின் கேப்டனாகவும் மொமினுல் ஹக் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் 2 வருடத் தண்டனை போதாது என்று ஐசிசியின் முடிவை விமரிசித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதிய பதிவு:
ஷகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏதாவது நடந்தால் வீரர்கள் நேராகப் புகார் அளிக்கவேண்டும். 2 வருடத் தண்டனை போதாது. இன்னும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். என்னை மோசமாகப் பேசுபவர்களுக்கு - ஊழலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இந்தக் கால வீரர்களுக்கு என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது நன்குத் தெரியும். எது நடந்தாலும் புகாரளிக்க வேண்டும் என்பதும் தெரியும். அப்படிச் செய்யாவிட்டால் பின்விளைவுகள் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். ஷகிப் அல் ஹசனின் நடவடிக்கையை முன்னாள் வீரர்கள் ரமீஸ் ராஜா, டீன் ஜோன்ஸ் போன்றோரும் விமரிசித்துப் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


