புரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை 36-33 என்ற
பாட்னா வீரரை மடக்க முயலும் ஜெய்ப்பூர் வீரர்கள்.
பாட்னா வீரரை மடக்க முயலும் ஜெய்ப்பூர் வீரர்கள்.
Updated on
1 min read


புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியை 36-33 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது பாட்னா பைரேட்ஸ்.
கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாட்னாவின் அபார ஆட்டத்துக்கு ஜெய்ப்பூர் அணியும் ஈடுகொடுத்து ஆடியது. ஆனால் பாட்னா தரப்பில் நட்சத்திர வீரர்கள் பார்திப் நர்வால், நீரஜ் குமார், ஜங் குன் ஆகியோர் எதிரணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர்.
முதல் பாதி ஆட்ட முடிவில் ஜெய்ப்பூர் 15-14 என முன்னிலை பெற்றிருந்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்த நிலையில், இறுதிக் கட்டத்தில் நீரஜ்குமார், ஜங்குன் ஆகியோர் அபாரமாக ஆடி பாட்னாவை வெற்றி பெற வைத்தனர். சிறந்த ரைடராக சுஷில் குலியாவும், டிபன்டராக சந்தீப் துலும் தேர்வு பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com